எஸ்.ஐ.ஆர் பற்றி எதிர்கட்சி தலைவர் வார்த்தையை சொல்லும் போது அது சரியானதா என ஆராய வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். 

Continues below advertisement

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடைபெற்ற 'திருப்பாவை பாசுரங்கள் பாராயணம்' செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

சொர்க்கவாசல் திறப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து அமைச்சர் தெரிவித்ததாவது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வின் போது 1,500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கான கட்டணமாக ரூ. 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளுக்காக 1,800 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆம்புலன்ஸ் வசதி, குடிநீர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 108 மாணவ, மாணவியர் பங்கேற்கும் திருப்பாவை பாசுரங்கள் பாடும் நிகழ்வு சென்னையில் உள்ள பல கோவில்களில் நடைபெற உள்ளது.

Continues below advertisement

தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தாது:

திருப்பரங்குன்றம் விவகாரத்தை தேர்லுக்காக ஊதி பெரிதாக்க நினைக்கிறார்கள், இந்த விவகாரம் தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏற்கனவே ஒருவர் வேல் உடன் சுற்றினார். அவர் தேர்தலில் என்ன ஆனார் என அனைவருக்கும் தெரியும்முருகன் புகழுக்கு புகழ் சேர்க்கும் ஆட்சி நடந்து வருகிறது. முருகன் மாநாடு நடத்தி உள்ளோம் இப்படி பல ஆன்மிக விஷயங்களை செய்து வருகிறோம் என கூறினார்.முருகன் எங்கள் முதலமைச்சர் உடன் துணை நிற்கிறார்  முருகனை எந்த சக்தியாலும் எங்களிடம் இருந்து பிறிக்க முடியாது என தெரிவித்தார்.

இபிஎஸ் ஆராய வேண்டும்:

வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறித்த எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலளித்ததாவது: தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் பட்டியலில் இருக்க வேண்டும் என்பதும், தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதுமே முதல்வரின் நிலைப்பாடு.வாக்காளர் பட்டியலில் திருத்தம் (SIR) குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்தும் வார்த்தைகள் சரியானவைதானா என்பதை ஆராய வேண்டும்.அதே போல் தமிழிசை,அக்கா மீது மரியாதை வைத்துள்ளேன். ஆனால் பாஜகவையும் அக்காவையும் தேர்தலில் மக்கள் ஏமாற்றி வருகிறார்கள் அவரும் அவர் சார்ந்த கட்சியும் வரும் தேர்தலில் தோல்வியை தழுவ போகிறது.