திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். 

Continues below advertisement

சினிமாவில் கால் வைப்பது வேறு அரசியல் களத்தில் கால் வைப்பது வேறு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது பல அரசியல் நிகழ்வுகளை பேசி அதிரடி காட்டினார் விஜய். அதாவது, “200 தொகுதிகளை இறுமாப்புடன் வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசிக தலைவர் திருமாவளவனுக்கு கூட்டணி கட்சியால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என பல்வேறு விஷயங்களை பேசி அரங்கத்தை அதிர வைத்தார். 

இந்நிலையில் விஜய்யின் பேச்சுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசுகையில் “கூட்டணியில் தப்பு கணக்கு போடும் பழக்கம் திமுகவுக்கு இல்லை. அரசியலில் எந்த பிளஸும் மைனஸ் ஆக வாய்ப்பு இல்லை. சினிமாவில் வேண்டுமென்றால் பிளஸ் மைனஸ் ஆகும். 

நாங்கள் மன்னர் ஆட்சி நடத்தவில்லை. ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறது. வாரிசு என உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லிஅ. 

விஜய் சேற்றில் காலை வைத்தால்தான் தெரியும். சினிமாவில் காலை வைப்பது வேறு. சேற்றில் காலை வைப்பது வேறு. மழை, வெள்ள நிவாரணப்பணிகளில் சேற்றில் வெள்ளத்தோடு வெள்ளமாக நின்று பணியாற்றி வருகிறோம். 

இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் திருமாவளவனுக்கு கிடையாது. எதுவாக இருந்தாலும் துணிச்சலாக பேசக் கூடியவர் திருமாவளவன். வேங்கைவயல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. அதுகுறித்து தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  வேங்கைவயல் விவகாரத்தில் எந்த அமைச்சரோ, எம்.எல்.ஏவோ தலையிடவில்லை” எனத் தெரிவித்தார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola