திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூரில் அமைந்துள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டார்.

Continues below advertisement

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், 2021-22-ஆம் ஆண்டுக்கான 250-க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். கல்லூரி தூரமாக  உள்ளதால் பேருந்து வசதி செய்ய ஆட்சியரிடம் அறிவுறுத்தி உள்ளேன். பல ஆண்டுகளாக சட்டக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு வழங்கப்படாமல் இருந்தது. 20 நாட்களுக்குள் அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் பட்டமளிப்பு விழா நடத்தி முடிக்கப்படும்.

 

Continues below advertisement

நாகர்கோவில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற குற்றச்சம்பவங்களை எப்போதும் முதல்வரும் சரி, அனைவரும் சரி, முதல்வரின் உத்தரவின் பேரில் எப்போதும் அதற்கு எந்த ஆதரவும் இல்லை. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது தவறாக கைது செய்து அத்துமீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் சம்பவத்தில் யார் யார் ஈடுபட்டனரோ? அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. துறை ரீதியான நடவடிக்கையும் சஸ்பென்சனும் செய்யப்பட்டுள்ளது.சிறை துறையினர் மனஅழுத்தத்தில் உள்ளனர். பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை, காவல்துறைக்கு நிகரான ஊதியம் இல்லை, அதனை சரி செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தொடர்ச்சியாக மின்வெட்டு இருந்தால் உடனடியாக சரி செய்யப்படும். திருவள்ளூரில் மின் தடை இருந்தது சீர் செய்யப்பட்டது. மின்சார சாதனங்கள் பழுதடைவதை கண்டறிந்து சரி செய்யும் பணிகள் நடைபெறுகிறது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எடப்பாடி எப்படியாவது முதல்வராக முயற்சி செய்தார்

வாக்கு எண்ணிக்கை முடிந்த அன்று  எடப்பாடியும் எடப்பாடி மகனும், ஸ்டாலினும் ஸ்டாலின் மகனும் 4 பேரும் சேர்ந்து செய்த முயற்சி தோல்வி அடைந்தது. தொடர்ந்து இப்போதுதான் எடப்பாடி பழனிசாமி 50 நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்கிறார். எப்படியாவது முதல்வராக முயற்சி செய்தார். இரண்டு பேரும் சேர்ந்து அவர்களது சொத்துக்களை காப்பாற்ற நினைத்தார். எடப்பாடி அவருடைய தவறை உணர வேண்டும். அவருடைய தவறால்தான் இவ்வளவு பெரிய கட்சி அதல பாதாளத்தில் சென்றுள்ளது. அவர் என்ன தவறு செய்தார் என்று அவரிடமே கேட்க வேண்டும். அதிமுக போன்ற கட்சிகள் என்றைக்குமே தனிப்பட்ட காரணங்களுக்காக சொந்த குடும்பத்தை நோக்கி பயணித்தது இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார்கள். அந்த தலைமைதான் அந்த கட்சியை தாக்குப் பிடிக்க முடியும். கட்சி தொண்டர்களுக்கு வழி நடத்த முடியும். என்றைக்கு சுயநலமாக அவருடைய குடும்பமும் அவருடைய மகனும் கட்சியை பயன்படுத்தினார்களோ அன்றைக்கு கட்சி அழிந்துவிட்டது. எம்ஜிஆர் ஆரம்பிச்ச கட்சியை மூட்டை கட்டி சேலத்தில் போய் மாவட்டச் செயலாளராக உட்கார்ந்து விட்டார். 50 நாள் முயற்சி தோல்வி அடைந்து விட்டது. அவருடைய தவறை உணர்ந்து, ஜானகி கட்சியை ஜெயலலிதாவிடம் கொடுத்தது போல் கட்சியை யாரிடமாவது கொடுத்து விட்டு சென்றால் நல்லது.

நானா இருந்தாலும் நடவடிக்கை

தவறு செய்தவர்களை காப்பாற்றும் அரசு அல்ல, யாராவது தவறு செய்திருந்தால் யாராயிருந்தாலும் நானா இருந்தாலும் கண்டிப்பாக முறையாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். யாரையும் காப்பாற்ற இல்லை, யாராவது தவறுகள் இருந்தால் கண்டிப்பா சட்டபூர்வமாக யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த பாரபட்சமும் இல்லை, எந்த அரசியல் குறிக்கீடும் இருக்காது” என்று கூறினார்.