சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள நில அளவைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் திறந்து வைத்தார் 


தேசிய நில ஆவணங்களை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ 1.47  கோடி நிதியில் 2023 ம் ஆண்டில் இப்பயிற்சி மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை பயன்படுத்தி இப்பயிற்சி மையத்தில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.


நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்:


பயிற்சி மையத்தில் சுமார் 50 நபர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்த வகுப்பறை மற்றும் இதர உட்கட்டமைப்புகளுடன் தற்போது கூடுதலாக 50 நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் 90 இலட்சம் செலவில் நவீன நிலஅளவை உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


45 இலட்சம் செலவில் 3600 சதுர அடி பரப்பில் உட்கட்ட அமைப்புகள் மேம்படுத்தப்பட்டு பயிற்சி வகுப்பறை சிறிய கூட்ட அரங்கம் ஆய்வுக்கூடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.


உள்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்து பேசிய அமைச்சர் கே. கே. எஸ். ஆர். ராமச்சந்திரன், "தமிழக முதலமைச்சர் வருவாய் துறையில் பட்டா வழங்கும் பணியும் சர்வே செய்யும் பணியும் விரைவு படுத்த வேண்டும் என்று அறிவுறிதியதை தொடர்ந்து இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.


"சர்வேயர்கள் பற்றாக்குறை இருக்கக்கூடாது"


இந்த மையம் சர்வேயாருக்கு பயிற்சி கொடுப்பதற்கும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் துறை இணைந்து இன்று மையத்தினை தொடக்கி உள்ளோம். முன்பாக தஞ்சாவூரில் உள்ள ஒரத்தநாட்டில் 150 நபர்கள் அங்கு இருக்கும் இடத்தில் பயிற்சி பெற முடியும்.


மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 நபர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், இந்த மையத்தில் ஒரு 50 பேர் பயிற்சி பெறலாம் ஆகியினால் ஒரே நேரத்தில்  250 நபர்கள் சர்வே செய்ய பயிற்சி செய்வதற்கு வசதியாக கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 


புதிதாக வருபவர்களுக்கு இந்த பயிற்சி இரண்டு மாத காலம் அளிக்கப்படும். வி.ஏ.ஓ.களுக்கு  ஒரு மாத காலம் பயிற்சி வழங்கப்படும். சர்வேயர்கள் பற்றாக்குறை இருக்கக்கூடாது என கடந்த ஆண்டு ஆயிரம் நபர்கள் சர்வே செய்யும் பணிகளுக்காக  டிஎன்பிஎஸ்சி மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர் 


இந்த ஆண்டு 300 நபர்கள் வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி-க்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வே செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை இல்லாத நிலையில் பொதுமக்கள் அழைக்கும் நேரத்தில் சென்று சர்வே செய்யும் நிலையை உருவாக்க உள்ளோம்.


நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு சர்வே நடக்கும் பணிகளை விரிவுபடுத்தவும் முறையான வழியில் நடத்தவும் சர்வே துறை செய்து வருகிறது. பட்டா மாறுதல் உங்களை தேடி முதலமைச்சர் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் முகாம்கள் அமைக்கப்படுகிறது.


அதில் எத்தனை மனுகள் வந்துள்ளது அந்த மனுக்களில் எத்தனை தீர்வு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் கவனத்திற்கு செல்லும்படி முதலமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. பட்டா நல்ல முறையில் இருந்தால் உடனடியாக வழங்கப்படும்.


ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் என பலர் இருந்தால் பிரச்சனை ஏற்படலாம். விசாரிக்காமல் பட்டா வழங்கப்பட்டால் தாசில்தார் மீது  நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் பட்டா விரைவாக கொடுக்கப்படுகிறது.


30-40 நாட்களில் ஆன்லைனில் பட்டா வழங்கப்படுகிறது. எங்களால் முடிந்தவரை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விரைவுப் படுத்தி பணி செய்து வருகிறோம்" என்றார்.