Minister K.N. Nehru: தமிழ்நாடு அரசின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான அமைச்சர் கே.என். நேருவின் சமூக வலைதளப் பக்கமான ட்விட்டர் பக்கம் மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இவர் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார். நேற்று இரவு அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமான ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்தது யார்? என்ற விசாரணையும், ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் பக்கத்தை மீட்கவும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
KN Nehru Twitter: ஹேக் செய்யப்பட்ட அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர்..! மர்மநபர்கள் கைவரிசை..!
த. மோகன்ராஜ் மணிவேலன் Updated at: 26 Nov 2022 09:37 AM (IST)
Minister K.N. Nehru: அமைச்சர் கே.என். நேருவின் சமூக வலைதளப் பக்கமான டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட அமைச்சர் நேருவின் டிவிட்டர் பக்கம்