அமைச்சர் எ.வ வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தகம் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. நூல் வெளியிட்டு விழாவில் முதல் பிரதியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
துரைமுருகனை கிண்டல் அடித்து பேசிய ரஜினி: விழாவில் அமைச்சர் துரைமுருகனை கிண்டல் அடிக்கும் விதமாக பேசிய நடிகர் ரஜினிகாந்த், "ஒரு வகுப்பறையில் டீச்சருக்கு புதிய மாணவர்களை பற்றி பிரச்னை இல்லை. பழைய மாணவர்கள் தான் சிரமமானவர்கள். அந்த வகையில் இங்கு நிறைய சீனியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பெயில் ஆகிப் போனவர்கள் அல்ல;
ரேங்க் வாங்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள். அவர்களில் துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணில் விரல் விட்டி ஆட்டியவர். அத்தகைய சீனியர்களை சமாளிப்பது என்பது மிக கடினமான ஒன்று.
அவர்கள் அனைவரையும் சமாளித்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஹார்ட்ஸ் ஆஃப் யூ. திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை மு.க. ஸ்டாலின் திறமையாக கையாள்கிறார்" என்றார்.
"எங்கள் நட்பு தொடரும்" ரஜினியின் கருத்தை விமர்சிக்கும் வகையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து சாகிற நிலைமையில் இருப்பவர்கள். நடிப்பவர்களால் இளைஞர்கள் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்" என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பேட்டி அளிதார். அதில், அமைச்சர் துரைமுருகனும் நானும் நன்பர்கள் தான் அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறினார்.
நடிகர் ரஜினி கூறியதற்கு விஐடி பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது விளக்கம் அளித்த அமைச்சர் துரைமுருகன், "ரஜினிகாந்த் சொன்னதை தான் நானும் சொல்கிறேன் எங்களுடைய நட்பு தொடரும். எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுமையாய் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்பொழுதும் போல் நண்பர்களாகவே இருப்போம். எங்கள் நட்பு தொடரும்" என்றார்.
இதையும் படிக்க: TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?