அதிரடியாக ஆறாம் வீட்டில் உச்சம் பெற்ற புதன் மற்றும் ஒளி பொருந்திய சூரியன் தொடர்பு கொள்ளப் போகிறது.   திடீர் அதிர்ஷ்டங்களால் தன வரவுகள் தாராளமாக இருக்கும்... கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்... 3 ம் அதிபதியின் உச்சத்தால்...  உங்களை பகைத்தவர்கள்  உங்களின் குணமறிந்து உங்களுக்கு நண்பர்களாக மாறுவார்கள்...  அல்லது எதிரிகளே இல்லாமல் போவார்கள். .  இடம், நிலம், வீடு,  சம்பந்தமாக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தான் கொண்டு வரப் போகிறது.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன்/மனைவி ஒன்று சேருவார்கள்.  ஒருவேளை  உங்களுக்கு திருமணம் ஆகி கணவன் அல்லது மனைவிக்குள் பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொண்டால்,  ஓரளவுக்கு அந்த பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வுகள் ஏற்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு....  மேஷ ராசி ’கணவனாக’ இருந்தால் மனைவி உங்களைப் பற்றி நினைக்க ஆரம்பிப்பார்...  அல்லது மேஷ ராசி ’மனைவியாக’ இருந்தால் கணவன் உங்களை பற்றி நினைக்க ஆரம்பிப்பார்.   

மொத்தத்தில் வழக்குகள் முடிவுக்கு வந்து...  ஒரு நல்ல  குடும்பப்பாங்கான இணைப்பை நீங்கள் பெறலாம்...   மற்றொரு முக்கியமான தகவல் அக்டோபர் 9ம் ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன்  கன்னியில் நீச்சம் ஆகப் போகிறார்...  உங்களுக்கு இரண்டிற்கும்  ஏழிற்கும் அதிபதி ஆறில் நீச்சம் அடைவது  குடும்பத்தை விட்டு நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கலாம்...  ஆனால் அதே சுக்கிரன் நீச்சதை கடந்தால்  ஆட்சி பெற்ற நிலையில் ஏழாம் வீட்டிலேயே வந்து அமர்வது சிறப்பான பலன்களை கொண்டு வரும்...  வெளிநாட்டிற்கோ அல்லது வெளி ஊர்களுக்கு சென்றவர்களாக இருக்கலாம் அல்லது பிரிந்து சென்றவர்களாக இருக்கலாம்,  அனைவரும் குடும்பத்தோடு ஒன்றிணைப் போகிறீர்கள்.  பணவரவு மிக சிறப்பாக இருக்கும்... குறிப்பாக எதிர்பாராத தன வரவு உங்களுக்கு உண்டாகும்...   தொழில் மேன்மை உண்டு...  உயர் அதிகாரிகள்  உங்களின் வேலையை பற்றி பாராட்டி  மற்றவர்களிடத்தில் உங்களை உயர்வாக பேசுவார்...   கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து...   காரணம்  இரண்டாம் இடம் என்று சொல்லக்கூடிய வாக்கு ஸ்தான அதிபதி கேதுவுடன் சேர்ந்து நீச்சம் ஆகிறார்,  ஆகையால்  வீட்டில்  உள்ளவர்களுடன், உங்களுக்கு  சற்று கடினமான போக்கு காணப்படலாம் எப்படி என்றால் நீங்கள் சாதாரணமாக  பேசிய வார்த்தைகள் கூட கடுமையாக மாறலாம்... ஆனால் அதுவே  மேஷ ராசிக்கு வேலை என்று வந்துவிட்டால்  குறிப்பாக கலைத்துறையினருக்கு  மிக மேன்மையான ஒரு வேலை அமையும்.  எப்படி இருந்தாலும்  இந்த புரட்டாசி மாதம்  உங்களுக்கு  ’இரு’ மாதிரியான பலன்களை ஏற்படுத்தும்...  முதல்  சுக்கிரன் நீச்சமாவதால் அதற்கான விதியில் உங்களை சற்று  குடும்ப ரீதியான தொந்தரவுகளை கொடுத்து, தொழில் ரீதியான மேன்மைகளை கொடுப்பதும்.  பின்பு சுக்கிரன் ஆட்சி வீட்டிற்கு வந்து பின்பாக உங்களுக்கு மிகப்பெரிய பலத்தையும்  முன்னேற்றத்தையும் கொடுக்கும் அதேபோல திருமணம் ஆகாத மேஷ ராசியினருக்கு நல்ல வரன் அமைவதையும் எதிர்பார்க்கலாம்....  

 

7ல் செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கை :

ராசி அதிபதியே 7ல் அமர்திருப்பது எதிர்பராத தனவரவை உங்களுக்கு உருவாக்கி கொடுக்கும். வாழ்க்கையில் நீங்கள் வாழ்க்கைதுணையோடு வீட்டை விட்டு ஒரு லாங் ட்ரிப் போக வேண்டும் என்று நினைத்தால் அது தற்போது சாத்தியமாகும்... அதே போல் வாழ்க்கை துணையால் சுபச்செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது... புதன் 3ல் இருப்பது நினைத்ததை நிறைவேற்றும் சக்தியை உங்களுக்கு கொண்டு வரும்...