Christmas Celebration: இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


கிறிஸ்துமஸ் திருநாள்:


கிறிஸ்வர்களால் இறைவனாக போற்றப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான இன்று கிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவர்களின் முக்கியமான பண்டிகை நாளான இன்று, உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இதையொட்டி அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதோடு, இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் ஆட்டு கொட்டகையுடன் கூடிய குடிலும் அமைக்கப்பட்டு உள்ளது.


சென்னையில் கொண்டாட்டம்:


சென்னையில் உள்ள தேவாலயங்களில் நேற்று மாலை முதலே கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் களைகட்டியது. சென்னை சாந்தோம், சென்னை கிண்டி அருகே பரங்கிமலையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க புனித தோமையார் தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டன. தொடர்ந்து நள்ளிரவில் கூட்டு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றன. அப்போது, குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டது. இதேபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில்  உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மிகவும் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்திலும் கூட்டு திருப்பலி, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. சாண்டா கிளாஸ் வேடமணிந்திருந்த நபர்கள், சிறுவர்களுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.


வேளாங்கண்ணி கொண்டாட்டம்:


உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.



வேளாங்கண்ணி விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர் குழந்தை இயேசு பிறப்பின்போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரு மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. விழாவையொட்டி வேளாங்கண்ணியில் மாவட்ட  கண்காணிப்பாளர் ஹர்சிங் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் மாதாவை தரிசனம் செய்துவிட்டு கடலில் சென்று நீராடுவதை வழக்கமாக வைத்திருப்பதால் இரவிலும் அங்கு செல்லக்கூடும் என்ற காரணத்தால் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவண பாபு தலைமையில் தீனைப்பு மற்றும் மீட்பு துறையினர் காவல்துறையிடம் இணைந்து கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பத்தூர் கொண்டாட்டம்:


திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள சகாய மாதா ஆலயத்தில் ஏசு நாதரின்  பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு  பிராத்தனைகள், பல்வேறு வகையான  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏழை எளிய பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.   உலக அமைதி வேண்டியும், அனைவரும் சகோதர துவத்துடன் வாழவேண்டியும் 3000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள்  பிராத்தனை  செய்தனர். இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் கேரல் வாகனங்களில்  வந்த கிறிஸ்த்துவ சிறுவர்களுக்கு முஸ்லிம் சிறுவன் ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியது அப்பகுதியில் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தயொட்டி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில்  50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மாநிலடம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களும் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளன.