அரசு மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.


இதில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை ஒரு ஷிப்ட்டும், மதியம் ஒரு மணி முதல் இரவு 9 மணி வரை மற்றொரு ஷிப்ட்டும் இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை மூன்றாவது ஷிப்ட்டும் பிரிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள மூன்று ஷிப்ட்டுகளின் அடிப்படையிலேயே பணி வழங்கப்படும் என மக்கள் நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 


மொத்த ஊழியர்களில் 50 சதவீத ஊழியர்கள் முதல் ஷிப்ட்டிலும், 25 சதவீத ஊழியர்கள் இரண்டாவது ஷிப்ட்டிலும் 25 சதவீத ஊழியர்கள் மூன்றாவது ஷிப்ட்டிலும் பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.