கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் நேரு, சென்னை மேயர் பிரியா கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பு சோசியல் மீடியாவில் வைரலானது. சென்னை தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கான செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் நேரு, யம்மா.. பேசும்மா.. இங்க வாம்மா.. என்றெல்லாம் மேயர் பிரியாவிடம் உரையாடினார். இந்த சம்பவம்தான் வைரலுக்கு காரணமாக அமைந்தது. ஒரு மேயருக்கு இதுதான் மரியாதையா என்றும், மேயரை மதிக்காமல் மிரட்டல் தொனியில் அமைச்சர் பேசுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் மேயர் பிரியாவும் பயந்து பயந்தே நேருவிடம் பேசுவதாகவும் குறிப்பிட்டனர். இந்த விவகாரத்துக்கு தற்போது மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.



அவர் கொடுத்துள்ள விளக்கத்தில், 


''எப்போதுமே அமைச்சர் அண்ணாதான் செய்தியாளர் சந்திப்பில் பேசுவார். அன்று திடீரென என்னை பேசச் சொன்னார். அதனால் நான் பேசட்டுமா என்று கேட்டேன். நான் நார்மலாக கேட்டேன். அதற்கு அமைச்சரும் பேசும்மா என்றார். அது சாதாரணமான உரையாடல். மற்றபடி அவர் என்னை மிரட்டியதாகவோ, கோவப்பட்டதாகவோ அர்த்தம் இல்லை. அவர் என்னை எப்போதுமே மரியாதையாகத்தான் நடத்துவார். சொல்லப்போனால் அவரது மகள் மாதிரி என்னைப் பார்த்துக்கொள்வார். அவர் என்னை ஒருமையில் பேசவில்லை. 


ஒரு மகள் மாதிரியான உரிமையில்தான் பேசினார். அமைச்சர் நேருவிடம் நான் பயந்து பேசவில்லை. அவர் கட்சியில் சீனியர். எங்கள் துறையின் அமைச்சர் அவர். அவர் மீது பெரிய மரியாதை உண்டு. அந்த மரியாதையில்தான் நான் அப்படி பேசுகிறேன். வேறு எந்த காரணமும் இல்லை. நான் மேயராகி 6 மாதங்கள் ஆகிறது. நான் எந்த பணியை முன்னெடுத்து சொன்னாலும் அமைச்சர் உறுதுணையாகவே இருக்கிறார். நான் கேட்டு இதுவரை எதையுமே அவர் வேண்டாமென்று கூறியதில்லை'' என்றார்


அதனை சோஷியல் மீடியாவில் குறிப்பிட்ட பலரும் பேப்பரை படிப்பதுதான் வரவேற்புரையா என கேள்வி எழுப்பினர்