குளித்தலை அருகே மாயனூர் காவிரி ஆற்றில் 75 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகள் உற்பத்தி பெருக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

 

Continues below advertisement

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் காவிரி ஆறு கதவணையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமை வகித்து . 75 ஆயிரம் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்கு தொடங்கி வைத்தார்.

 

 

கல்பாசு, ரோகு கட்லா, மிர்கால் உள்ளிட்ட 75 ஆயிரம் நாட்டினை மீன் குஞ்சுகளை  கலெக்டர் தங்கவேல் காவிரி ஆற்றில் விட்டார். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அலுவலர்கள் பொதுப்பணித்துறை வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் மீனவர்கள் காவிரி ஆற்றில் பிடித்த மீன்களை விற்பனை செய்யும் வகையில் சிறந்த வெளியில் விற்பனை செய்வதால் மீன்கள் மற்றும் மீனவர்கள் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

 

மீன்கள் விற்பனை செய்யும் வகையில் (மீன் மார்க்கெட்) கொட்டகைடன் கூடிய விற்பனை மேடை அமைத்து தர வேண்டும் என சுமார் 250க்கு மேற்பட்ட மீனவர்கள் சார்பில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொதுப்பணிப்பு துறை செயற்பொறியாளர் ( எஸ் டி ஓ)க்கு பரிந்துரை செய்தார். இந்நிகழ்ச்சியில் மீனவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.