மாயனூர் கதவனைனக்கு தண்ணீர் வரத்து சரிவு.


காவிரி ஆற்றில் மாயனூர் கதவனைக்கு, தண்ணீர் வரத்து  குறைந்தது. காவிரி ஆற்றில் கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு 17,906 கன அடி தண்ணீர் வந்தது.  காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,731 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. காவிரி ஆற்றில் சம்பா சாகுபடி பணிக்காக 15,931 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில் 800 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது.






 


அமராவதி அணை நிலவரம்


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 1,191 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வினாடிக்கு 1,258 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 89.41 அடியாக இருந்தது. கரூர் பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு காலை வினாடிக்கு 1477 கான அடி தண்ணீர் வந்தது.


பொன்னணியாறு அணை


கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு, காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 27.87 அடியாக இருந்தது.


 




ஆத்துப்பாளையம் அணை


கா. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 42 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மேலும், 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.24 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 42 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


நங்காஞ்சிஅணை நிலவரம்


திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் 39.37 அடி உயரம் கொண்ட, நங்கஞ்சி அணை நிரம்பியுள்ளது.நங்காஞ்சி ஆற்றிலிருந்து இரண்டு பாசன கிளை வாய்க்காலில் தலா 10 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 20 கன அடி தண்ணீர் வந்தது.


மழை நிலவரம் 


கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தோகை மலையில் மட்டும் ஒரு மில்லி மீட்டர் மழை பெய்தது.


வரும் கோடையில் வறட்சி ஏற்படாமல் இருக்க கடந்த ஆண்டைப் போல அதிக மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்.


வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஆண்டு சராசரியை விட இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போல அதிக மழையை மாவட்டம் பெற வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மலை அளவு 652.20 ஆக உள்ளது. இந்த மலையளவை ஜனவரி, பிப்ரவரி ஆகிய பணிக்காலங்களில் 13.08 மில்லி மீட்டரும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் கோடை காலத்தில் பெய்யும் 125.08 மில்லி மீட்டரும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய நான்கு மாதங்களில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் 153.15 மில்லி மீட்டரும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மூன்று மாதங்களில் வடகிழக்கு பருவமழையில் 360.89 மில்லி மீட்டரும் என நான்கு பருவங்களில் ஆண்டு சராசரி மழையை கரூர் மாவட்டம் பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 11 ஆண்டுகளில் 2011, 2015, 2017, 2020, மற்றும் 2021 ஆண்டுகளில் சராசரியை விட அதிக அளவுமழையை கரூர் மாவட்டம் பெற்றுள்ளது.


 




மற்ற ஆண்டுகளில் மழையின் அளவு குறைந்து. மாவட்டம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு வறட்சி போன்றவற்றை சந்தித்து அந்த காலகட்டங்களில் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினர்களும் மிகுந்த சிரமத்தை அனுபவித்து விட்டனர். குறிப்பாக 2016 ஆம் ஆண்டில் அந்த ஆண்டு முழுவதும் 350.52 மில்லி மீட்டர் மழையை தான் கரூர் மாவட்டம் பெற்றது. அந்த ஆண்டு கரூர் மாவட்டம் கடுமையான வறட்சியை சந்தித்தது. தற்போதைய நிலையில் வடகிழக்கு பருவ மழையை தவிர்த்து பனிக்காலம், கோடை காலம் தென்மேற்கு பருவமழை ஆகிய மூன்று சீசன்ங்கள் வரை கரூர் மாவட்டம், 291.31 மில்லி மீட்டர்  மழையை தான் பெற்றுள்ளது. 


ஆண்டு சராசரியை மழையை விட மேலும் 360.89 மில்லிமீட்டர் மலையை நாம் பெற வேண்டும் ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்தது. தற்போது புயல் சின்னம் காரணமாக கரூர் மாவட்டம் முழுவதும் லேசான அளவில் தான் மழை பெய்தது. டிசம்பரிலும் மாவட்டம் குறிப்பிடத்தக்க அளவுமழை யை பெறவில்லை. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்து குளித்தலை வரை ஆற்றுப் பாசனம் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் விவசாயம் நடைபெற வேண்டும் என்றால்மழை அதிக அளவு பெய்ய வேண்டும். என்ற நிலை உள்ளது. இதன் காரணமாகத்தான் ஆண்டுதோறும் கரூர் மாவட்டம் ஆண்டு சராசரி மழையை தாண்டியும் பெய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.


எனவே, இனிவரும் நாட்களில்கடந்த ஆண்டை விட கரூர் மாவட்டத்திற்கு அதிக அளவு மழை பெய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.