திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு,  வினாடிக்கு, 360 கனஅடி தண்ணீர் வந்தது. காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து, 545 கன அடியாக குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட,  அணையின் நீர்மட்டம், 89.41 கன அடியாக இருந்தது. தற்போது 3994 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.




அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 180 கனஅடி தண்ணீரும், திறக்கப்பட்டது. அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 270 கன அடி யாக இருந்தது. நேற்று முன் தினம் வினாடிக்கு, 306 கன அடி தண்ணீர் வந்தது.




 


மாயனூர் கதவணை


காவிரி ஆற்றில் மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 22 ஆயிரத்து, 694 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 22 ஆயிரத்து, 392கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன சம்பா சாகுபடி பணிக்காக, ஆற்றில், 21 ஆயிரத்து, 71 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு, 1,320 கன அடி தண்ணீரும் திறக் கப்பட்டுள்ளது.


நங்காஞ்சி அணை


திண்டுக்கல் மாவட்டம், நங் காஞ்சி அணைக்கு வடகாடு மலைப் பகுதிகளில் மழை கார ணமாக நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 40 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து, நான்கு பாசன கிளை வாய்க்காலில் தலா, கன அடி தண்ணீர் 10 திறக்கப்பட்டது. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 39.35 கன அடியாக உள்ளது.


ஆத்துப்பாளையம் அணை


 க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நில வரப்படி அணைக்கு, தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 26 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


பொன்னனியாறு அணை


கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள பொன்னனியாறு அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 27.93 அடியாக இருந்தது. 




கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக இருந்தது. மதியம் ஒரு மணி முதல் கரூர் டவுன், வெள்ளியணை வாங்கல், வேலாயுதம்பாளையம், பசுபதிபாளையம், திருமாநிலையூர், வெங்கமேடு, தான்தோன்றி மலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சிறிது நேரம் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. கிருஷ்ணராயபுரத்தை அடுத்த வயலூர், பஞ்சப்பட்டி, ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. மழை காரணமாக மானாவாரி நிலங்களில் சோளம், துவரை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.