மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் அருகே நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement


இந்நிலையில் போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அதில் அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகமும் கைது செய்யப்பட்டார்.


கடலூர் மாவட்டத்தில் மலையடிக்குப்பம், பெத்தான் குப்பம், கொடுக்கன் பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பிரதான தொழிலாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.


இந்த கிராமத்தில் 167 ஏக்கர்  அரசுக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தப்படுகிறது என அரசு சார்பில் ஏற்கனவே அப்பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் பல தலைமுறைகளாக இங்குதான் விவசாயம் செய்து வருகிறோம் எனவும் வேறு வாழ்வாதாரம் இல்லை எனவும் கூறி வருகின்றனர்.


எனவே விவசாய நிலத்தை கையகப்படுத்த கூடாது என கோரிக்கை வைத்து வருகின்றனர்.


ஆனாலும் அரசு நிலத்தை கையகப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களோடு சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக கூறி சண்முகம் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.