- தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்தார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.
- பூந்தமல்லி முதல் போரூர் வரை டிசம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் - சென்னை பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையேயான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்திற்கு பின் மெட்ரோ மேலாண்மை இயக்குநர் சித்திக் தகவல்
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு ஒரு கிராம் ரூ. 8,270-க்கும் ஒரு சவரன் - ரூ. 66,160-க்கும் விற்கபபடுகிறது.
- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் நார்த்தவாடா கிராமத்தில் மாணவர் வெட்டிக் கொலை
- வெறும் கூட்டம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடிய ஒரு இயக்கத்தின் தொடக்கம் - தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக் குழு கூட்டத்திற்கு தலைவர்களை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ வெளீயிடு
- கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ₹71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
- தூத்துக்குடி மகாராஜா என்ற பிரபல ரவுடியை கிண்டி அருகே துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்த போலீசார்
- பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை அமல்படுத்த வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் மார்ச் 23ம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
- ஐ.பி.எல் 2025 முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சென்னை வருகை
- அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு கிராம வங்கியில் மஞ்சள் பையை முகத்தில் அணிந்தபடி கொள்ளையடிக்க முயன்ற சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ஆறுமுகவேலன் கைது
- நடிகர் விஷால் தங்கையின் கணவரும், பிரபல நகைக்கடை அதிபருமான உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு!
Tamilnadu Roundup: ஓட்டுநர் இல்லா மெட்ரோ சோதனை ஓட்டம்.. சென்னையில் மும்பை வீரர்கள்- 10 மணி செய்திகள்
ஜேம்ஸ் | 21 Mar 2025 10:04 AM (IST)
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.
தலைப்புச் செய்திகள்
Published at: 21 Mar 2025 10:04 AM (IST)