விழுப்புரம் : மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் விஷச்சாரயம் குடித்து 14 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரில் 5 பேரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார் குப்பத்தில் கடந்த மே 13ம் தேதி விஷ விசாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்த மரக்காணம் காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து இதுவரை குற்றவாளிகள் 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ஆறுதல் கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அடுத்த சில நிமிடங்களிலேயே விஷ சாராய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி அதிரடி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல சாராய வியாபாரிகளான மரக்காணம் பகுதியை சார்ந்த முத்து, அமரன், ரவி, மண்ணாங்கட்டி, ஆறுமுகம் ஆகிய 5 பேரையும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி பரிந்துரை செய்தனர். அந்த பரிந்துரையின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அமரன்,ரவி, முத்து , மன்னாங்கட்டி, ஆறுமுகம் ஆகிய ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க ஆட்சியர் பழனி உத்தரவிட்டத்தின் பேரில், ஐவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்