சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கு முன்பு பேசிய அவர், ”பல்வேறு துறைகளில் நாட்டிற்கே முன்னோடியாக நமது தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அரசியலை கடமையாகவும், தொண்டாகவும், சேவையாகவும் நினைக்க வைத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர். எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை, எனக்கு நானே இலக்கு வைத்துள்ளதாக” தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் ஏராளமான தொழில் முதலீடுகள் வந்துள்ளதாகவும், இதுவரை ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.