முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் எதிரே தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 27ஆம் தேதி சென்னை செனடாப் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு வெற்றிமாறன் என்பவர் தீக்குளித்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். 40 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.