✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!

செல்வகுமார்   |  07 Sep 2024 07:28 PM (IST)

Maha Vishnu: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணுவுக்கு வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!

சென்னை அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை குறித்து மகா விஷ்ணு  என்ற நபர் பேசினார் , அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததற்காக, அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரசு பள்ளியில் சர்ச்சை கருத்து: 

ஆன்மீக சொற்பொழிவாளர் என கூறப்படும் மகாவிஷ்ணு என்பவர் அரசுப் பள்ளிகளில்  பேசிய கருத்துக்களும், அரசுப்பள்ளி ஆசிரியருடன் கருத்து மோதலில் ஈடுபட்டதும், மாற்றுத்திறனாளிகள் பற்றிய அவரது பேச்சும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரமானது, அவரே தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது.

வழக்குப் பதிவு:

இதையடுத்து, அவர் மீது திருவொற்றியூர் காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையத்தில் பலரும் புகார் அளித்தனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவிடம் சென்னை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 

இந்நிலையில், தற்போது அவர் மாற்றுத்திறானிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததற்காக , அவர் மீது 5 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வலுத்த எதிர்ப்பு:

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அரசுப்பள்ளிகளில் என்ன நடக்கிறது? எனவும், ஆசிரியர் சங்கரை அவமதித்த மகாவிஷ்ணு மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் அரசுப்பள்ளி ஆசிரியரான மாற்றுத்திறனாளி சங்கரை அவமதிக்கும் முறையில் நடந்து கொண்ட மகாவிஷ்ணுவை சும்மா விடமாட்டேன் என்று ஆவேசத்துடன் கூறினார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் இனி பள்ளிகளில் கல்வியைத் தவிர மற்ற நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று அதிரடி உத்தரவிட்டது. மேலும், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிவியல் வழி மட்டுமே முன்னேற்றத்தின் வழி என்று அனைவருக்கும் அறிவுறுத்தினார்.

இந்த சூழலிலே மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் பல காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த தருணத்தில், மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வரும் செப்டம்பர் 20 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Published at: 07 Sep 2024 05:55 PM (IST)
Tags: tamilnadu GOVERMENT SCHOOL maha vishnu
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.