வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


பெண்களுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம்:


ஆனால், இந்த செய்தி வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே இந்த தகவல் பொய்யானது என்பது தெரிய வந்துள்ளது. அருப்புக்கோட்டையில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகளின் தொடக்க விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று கலந்து கொண்டார்.





ஜனவரி முதல் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.


அமைச்சர் தந்த விளக்கம்:


இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே #திராவிட_மாடல் அரசின் இலக்காகும். 


 






முதலமைச்சர் ஸ்டாலினின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.


ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல முக்கிய திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, மகளிருக்கான இலவச பேருந்து திட்டம், மக்களை தேடி மருத்துவம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் ஆகியவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


இதையும் படிக்க: "யாருக்கும் பாதுகாப்பு இல்ல" மருத்துவருக்கு கத்திக்குத்து.. சாட்டையை சுழற்றிய தவெக தலைவர் விஜய்!