மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போதுதான் கட்டி முடிப்பீங்க ? என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

பொதுநல வழக்கு விசாரணையின்போது சரமாரி கேள்வி

தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடக்கப்பட்டது.  இந்த வழக்கில் ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும்போது ஒவ்வொரு காரணத்தை  தூக்கிக் கொண்டு வருவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முதலில் கொரோனா காலக்கட்டம் என்றீர்கள் இப்போது இன்னொரு காரணத்தை கொண்டுவருகின்றீர்கள் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்களை பார்த்து நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்

2015ல் அறிவிக்கப்பட்டு, 2018ல் அடிக்கல் நாட்டப்பட்டது

மதுரையில் 2015 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், 3 வருடம் கழித்துதான் 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது.  அதற்கு பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்னும் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் சொன்னது என்ன ?

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி  ஆகியோர் அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய  அரசுத் தரப்பில், கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுவிட்டது. பணிகள் துவங்கி 2026க்குள் நிறைவடைந்துவிடும் இடையில் கொரோனா காலம் ஏற்பட்டதால் தாமதம் ஆகிவிட்டது என குறிப்பிட்டனர். ஆனால், நீதிபதிகளோ, கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம் என தெரிவித்து காட்டமாக பதில் அளித்தனர்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது என்றும் ?  கடந்த ஐந்து ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் எனவும் கேள்விகளை மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்களை நோக்கி எழுப்பிய நீதிபதி,  கட்டுமான பணிகளை எப்போது தொடங்கி, எப்போது முடிப்பீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பினர்