காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வடகலை பிரிவினரும் வேதபாராயணத்தை பாட அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், முதல் 3 வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அடுத்த 3 வரிசையில் வடகலை பிரிவினரும், சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தமிழ் பேசுபவர்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் பேசுபவர்களும் பாடுகிறார்கள் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 


வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில், வீடியோ பதிவுடன் வரும் 25-ந் தேதி அறநிலையத்தறை உதவி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பிரமோற்சவ பிரிவில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண