டாஸ்மாக்கின் மதுபானக் கடைகளில் காலியான மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தொடர்பாகவும் உயர்நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது.


மேலும், இந்த திட்டத்தை கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் திட்டத்தை அமல்படுத்தவும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், திரும்ப பெறும் பாட்டில்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் வருவாய் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 17-ந் தேதி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.