Madhubani Painting : புதுச்சேரி: மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் கர்ப்பிணி பெண் 9 அடி நீளம் 7 அடி அகலத்தில் மதுபானி ஓவியம் வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஓவியர்  சோலை அபிராமி. இவர் ஓவியர் ஆசிரியராகவும் உள்ளார். தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளை பெரிய அளவில் ஓவியங்களாக தீட்டி வரும் இவர், மகளிர் தினத்தை முன்னிட்டு, தனது இல்லத்தில் 9 அடி நீளம் 7 அடி அகலத்தில்  மதுபானி ஓவியம் வரைந்துள்ளார். இந்த ஓவியத்தில் பூமாதேவி கர்ப்பிணி பெண்ணை தாங்குவது போலவும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவும் தீட்டப்பட்டுள்ளது. இந்த மாதம் பிரசவம் நடைபெற உள்ள நிலையில் இந்த ஓவியம் வரைந்ததை இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் பார்த்து ஓவியரை பாராட்டி வருகின்றனர்.


இது குறித்து பேசிய ஓவியர் சோலை அபிராமி, தொடர்ந்து பல ஆண்டுகளாக வித்தியாசமான முறைகளில் ஓவியம் தீட்டி வருவதாகவும், மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வட மாநில கலாச்சார மதுபானி ஓவியம் வரைந்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இடைவெளி இல்லாமல் வரையப்பட்ட ஓவியத்தை இந்தியன் புக்-ஆப் ரெக்கார்ட் சாதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சனைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.