சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களின் வீடுகளுக்கு, தன்னார்வலர்கள் உடன் இணைந்து மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 



இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், கோவையில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வெளிமாநிலத்தவர்களுக்கு அதிக அளவில் கொரோனா சோதனை நடத்தப்படுவதே தொற்று அதிகரிக்க காரணம் என்றார். சென்னையை பொறுத்தவரை தற்போது 8000 ஆக்சிஜன் மற்றும் சாதாரண படுக்கைகள் காலியாக உள்ளதாகவும், சென்னையில் படுக்கைகள் தேவை தற்போது குறைந்துள்ளதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றார். மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது 230 மெட்ரிக் டன்னாக இருந்த ஆக்சிஜன் கையிருப்பு தற்போது 650 டன்னாக அதிகரித்திருப்பதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்