சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு நாளை மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்கிறது. சென்னையில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மன்னார்வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பைவிட ஒரு சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. வட தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 15ஆம் தேதி 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.