CM Stalin: பாஜகவிற்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


நெல்லையில் ஸ்டாலின் பரப்புரை:


உலகின் மிகப்பெரிய ஜனநாயாக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதனையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. 


அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய நிலையில், இன்று கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரித்தார். திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சார்பில் ராபர்ட் ப்ரூஸ், கன்னியாகுமரி  தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் போட்டி,  விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி  காங்கிரஸ்  வேட்பாளர் தாரகை கத்பர்ட்  ஆகியோரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின். 


இந்த நிலையில், நாங்குநேரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது, நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”வீரத்தின் விளை நிலமான நெல்லை சீமைக்கு வந்துள்ளேன். தற்போது அடிக்கடி தமிழகத்திற்கு வரும் பிரதமர் திருநெல்வேலிக்கு தற்போது வருகை தந்திருந்தார். வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் எங்கே போயிருந்தார்?


”தமிழர்கள எப்படி வேணாலும் பேசுவீங்களா?” 


வெள்ள பாதிப்பு நிதி அளித்தீர்களா? 2 இயற்கை பேரிடர்கள் வந்தபோதும் தமிழகத்திற்கு ஒரு காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம். பாஜக ஓரவஞ்சனை அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.


தமிழர்களை வெறுக்காத, தமிழர்களை மதிக்கக்கூடியவர் மத்தியில் பிரதமராக வர வேண்டும்.  மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும். அரசு செலவும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் பணம். மக்களாட்சியில் மக்களை அவமதித்த பாஜகவின் தோல்வி உறுயாகி விட்டது.  


ஆட்சி, பதவி இருப்பதற்காக பாஜகவினர் என்ன வேண்டுமென்றாலும் ஆணவமாக பேசுவார்களா?  ஒரு மத்திய அமைச்சர் தமிழகர்கள் பிச்சைக்காரர்கள் என்கிறார். மற்றொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள் என்கிறார். தமிழர்கள் என்றால் பாஜகவிற்கு ஏன் இவ்வளவு வன்மம்? பாஜகவிற்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம்.


பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். திராவிட மாடல் திட்டத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லத்தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்" என்றார். 




மேலும் படிக்க


Nellai Congress Candidate: நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு; யாருக்கு வாய்ப்பு? காத்திருக்கும் மயிலாடுதுறை!