திருப்பூரில் நடைபெற்ற சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகே ஒலத்தப்பாளையத்தில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்தில் காரில் சென்ற சந்திரசேகரன், சித்ரா, ஷாக்ஷி , இளவரசன், அறிவித்ரா ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூரில் இருந்து திருச்சிக்கு கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பனிமனையை சேர்ந்த அரசு பேருந்து சென்றுள்ளது. அதே போல திருப்பூர், நல்லிக்கவுண்டன்வலசை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஹோண்டா சிட்டி காரில் திருக்கடையூர் சென்றுவிட்டு மீண்டும் திருப்பூர் நோக்கி சென்றுள்ளனர். அப்போது வெள்ளகோவில், ஓலப்பாளையம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரை ஒட்டி வந்த இளவரசன் (26), சந்திரசேகரன் (60), சித்ரா (57), அறிவிவித்ரா (30), ஷாக்ஷி (3மாத குழந்தை ) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாலை நிகழ்ந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.