தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஏபரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அனைத்து கட்சிகள் தரப்பில் பிரச்சாரம் மேர்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒருபக்கம் இருக்க கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முடிவடைகிறது.
நேற்று முன் தினம் பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால் பெரும்பாளான கட்சி வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்தனர். இதனால் நேற்று முன் தினம் மட்டும் 405 வேட்பாளர்கள் வேட்ப மனு தாக்கல் செய்தனர். மத்திய சென்னை தொகுதியில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் உள்பட 9 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழ்ச்செல்வி உட்பட 9 பேர் மனு தாக்கல் செய்தனர். தென் சென்னை தொகுதியில் இதுவரை 22 பேர் வேட்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் இன்று வேட்பமனு தாக்கல் செய்ய உள்ளார்.
சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருக்கும் இதர தொகுதிகளிலும் வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 700 பேர் வேட்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். பிரதான கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலானோர் வேட்பமனு தாக்கல் செய்த நிலையில் இன்று சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் இதர வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி நாளில் கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புவர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நேரமான மதியம் 3 மணிக்குள் டோக்கன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர், இவ்வாறு டோக்கன் பெறுபவர்கள் நேரம் முடிந்த பின்னும் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் வேட்பமனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. அதேபோல் வேட்புமனு வாபஸ் பெற 30 ஆம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 30 ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் வேட்பமனு வாபஸ் பெற வேண்டும். அதன்பின் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.