தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதுார் மகாலிங்கசாமி கோயிலிக்கு தரிசனத்திற்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும், பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், கோயிலில் விஜயகாந்த்திற்கு பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி செய்து கொண்டார். தொடர்ந்து 27 நட்சத்திர சிவலிங்கங்களுக்கு தீபம் ஏற்றி வழிபட்டார். இதனைத்தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தார் .
பின்னர் கோயில் முழுவதும் உள்ள சாமிகளை தரிசனம் செய்து விட்டு, செய்தியாளர்களை சந்தித்த அவர்,
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் வேண்டுதலுக்காக வந்துள்ளோம். கும்பகோணத்தை சுற்றிலும் கோயில் ஸ்தலமாக உள்ளது அனைத்து கோயில்களுக்கும் தரிசனம் செய்வதற்காக வந்துள்ளோம். கொரோனா தொற்று பாதிக்காமல் அனைத்து மக்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து உள்ளேன்.
அமைச்சர்கள் வீட்டில் ரைடு செய்வது சாதாரணம் தானே. தமிழகத்தில் 50 ஆண்டு கால ஆட்சியில் இது தான் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதை பார்த்து கொண்டு இருக்கின்றோம். தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கட்டும், உள்ளாட்சித் தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்கின்றோம். எந்த தேதியில் அறிவித்தாலும் இந்த குழப்பம் இல்லாமல் அனைத்து இடங்களில் வெற்றி பெறவோம். இப்பொழுதே இந்த வெற்றிக்கு உழைக்க வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
திமுக அரசின் 100 நாள் நாட்கள் சாதனையில், சாதகங்கள் பாதகங்கள் இல்லாமல் நடுநிலையான ஆட்சியாகவும், நடுநிலை பட்ஜெட்டாகவும் உள்ளது. நடுநிலையான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஆட்சி அமைந்த 100 நாட்கள் ஆகிறது இனிவரும் நாட்களில் நல்லது நடக்கும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கேள்விக்க, மக்களும் அர்ச்சகர்கள் வரவேற்றால் நாங்கள் வரவேற்கின்றோம். பல வருடமாக இருந்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார்கள். அனைவரும் வரவேற்கும் பட்சத்தில் நாங்கள் வரவேற்கின்றோம். தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்லபடியாக நன்றாக உள்ளார்.