புதுச்சேரி: புதுச்சேரி பகுதியில் வரும் 05.09.2025 (வெள்ளிகிழமை) அன்று மீலாது நபி தினத்தை முன்னிட்டு அனைத்து மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்களை மூட உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் மதுபான கடை மூட உத்தரவு
புதுச்சேரி பகுதியில் வரும் 05.09.2025 (வெள்ளிகிழமை) அன்று மீலாது நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, கலால் துறை ஆணையர் அவர்களின் ஆணைப்படி புதுச்சேரி, காரைக்கால் மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து, சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்படுகிறது. மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
மீலாது நபி
மீலாதுன் நபி “நபிகளின் பிறந்தநாள்” என்பது இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வருகின்ற முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும். மௌலித் என்ற வசனம் உலகின், எகிப்து போன்ற சில இடங்களில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க சூபி பெரியோர்களின் பிறந்த தினத்தைக் குறிக்கவும் உபயோகிக்கப்படுகின்றது
மௌலித் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தரித்தல், வம்சாவளி என்ற இடமிருந்து பெறப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு பிறப்பு, குழந்தையின் பிறப்பு, வம்சாவளி போன்ற கருத்துக்கள் வழங்கப்படுகின்றது. தற்காலப் பயன்பாட்டில் இச்சொல் முகமது நபி பிறந்தநாளைக் குறிப்பதாகவே உள்ளது. இந்நிகழ்வு ஏனைய சொற்களாலும் அழைக்கப்படுகின்றது.