கரூர் மாவட்டத்தில் 1006 மதுபான பாட்டில்கள் பறிமுதல் 83 பேர் கைது.
கரூர் மாவட்டம் முழுவதும் குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளில் விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்தது. இதன்படி கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் 83 வழக்குகள் பதியப்பட்டு 83 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 1006 மதுபான பாட்டில்களும் ஒரு பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சட்டவிரோதமாக தென்னை மரத்திலிருந்து 20 லிட்டர் கள்ளு விற்றதாக இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்தனர் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுவதோடு சட்ட விரோதமாக மது விற்பனை குறித்து பொதுமக்கள் மாவட்ட எஸ்பி அலுவலக எண்ணில் (04324 - 296299) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கரூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தும்பிவாடி பகுதியைச் சேர்ந்த அரங்கநாதன் வயது 61, பள்ளப்பாளையத்தை சேர்ந்த வெள்ளைய தேவன் வயது 62, திருவாடுதுறையைச் சேர்ந்த பிரேம்குமார் வயது 26, பால்ராஜபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல் வயது 51, உடையாபட்டியை சேர்ந்த தங்கதுரை வயது 49 ஆகிய 5 பேரும் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதை அடுத்து ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 37 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதே போல் குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி, வாலாந்தூர் கருங்கல்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசருக்கு தகவல் வந்தது. அதன் பெயரில் அங்கு சென்ற போலீசார் ஈச்சம்பட்டி பகுதியில் இனாம் கரூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் வயது 42, வாலாந்தூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் வயது 55, கருங்கல்பள்ளியை சேர்ந்த ஆகாஷ் வயது 21 ஆகிய மூன்று பேரும் மது விற்று கொண்டிருந்தனர். இதை அடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தளம் ஐந்து மதுபாட்டில்கள் வீதம் மொத்தம் 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் நொய்யல் அருகே மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 44 என்பவர் மது விற்று கொண்டிருந்தார். அவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஐந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கரூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கரூர் நல்லரான் பட்டியைச் சேர்ந்த தங்கதுரை வயது 45 ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த செந்தில்குமார் வயது 40 மங்களத்தை சேர்ந்த கருப்புசாமி வயது 31 மன்மங்கலத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி வயது 31 சிவகங்கை சேர்ந்த பாலகிருஷ்ணன் வயது 33 ஆகிய ஐந்து பேரும் அது வெற்றி கொண்டிருந்தனர் இதை அடுத்து ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 51 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன