கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற காணொளி வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் ஆஜராக இருந்தார். அப்போது அவர் தன்னுடைய வழக்கு விசாரணை இல்லாத நேரத்தில் அலுவலகத்தில் இருந்த பெண் ஒருவருடன் தவறாக நடந்துள்ளது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வீடியோ வேகமாக வைரலானது. 


இது தொடர்பான வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன்பாக எடுத்து கொள்ளப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் ஏ.என்.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதித்தும், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


அதன்பின்னர் சிபிசிஐடி காவல்துறையினர் அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சிறை தண்டனையும், ரூ. 6000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவு விட்டனர். இந்த வழக்கில் ஏற்கனவே 34 நாட்களாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால், தண்டனையை கழித்துக் கொள்ள கூறினர். மேலும் இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சிபிசிஐடி-க்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண