பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார் சசிகலா புஷ்பா. இவரது 2 வது கணவர் ராமசாமி வழக்கறிஞராக இருக்கிறார். ஒரு வழக்கு விசயமாக இவர் மற்றும் இவரது மகளுடன் மதுரைக்கு சென்று, மீண்டும் சென்னையில் ஜீவன் பீமா நகரில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது, வீட்டின் கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்காததால் சசிகலா புஷ்பாவிற்கு போன் அடித்துள்ளார். அந்த நேரத்தில் அமுதா என்ற ஒரு பெண் கசங்கிய ஆடைகளுடன் வந்து கதவை திறந்துள்ளார். யார் என்றே தெரியாத இந்த பெண் நம் வீட்டில் என்ன செய்கிறார் என்று நினைத்து கொண்டே ராமசாமி வீட்டிற்குள் சென்றபோது, வீடு முழுவதும் உண்ட உணவு பொருட்கள் சிதறியும், மதுவின் வாசனையும் அடித்துள்ளது.
ஒரு படுக்கை அறையில் சசிகலா புஷ்பா உறங்கிக்கொண்டும், மற்றொரு அறையில் யாரென்று தெரியாத மற்றொரு நபர் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் ராமசாமி தன் செல்போன் மூலம் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, அந்த மர்ம நபர் மற்றும் கதவை திறந்த அமுதா என்ற பெண்ணும் சேர்ந்து அவரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். இதனால் ,கணவன் என்ற முறையில் எனக்கு தெரியாமல் அந்த நபர்களை வீட்டிற்குள் அனுமதித்த மனைவி சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ராமசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, அதிமுக மாநிலங்களவை எம்பியாக இருந்த சசிகலா புஷ்பா, டெல்லி விமான நிலையத்தில் திமுக ராஜ்யசபா எம்.பி.திருச்சி சிவாவை கன்னத்தில் ஓங்கி அறைந்த சர்ச்சையில் சிக்கினார். அதன் பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது ஒரு சில குற்றசாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு முயற்சி செய்து, அதன்பிறகு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த சில நாட்களில் இவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும், பாஜக தமிழக தலைவர் பதவிக்கு முயற்சி செய்ததாக தகவலும் பரவியது. முதல் கணவன் லிங்கேஸ்வரனிடம் இருந்து பிரிந்த சசிகலா புஷ்பா, இரண்டாவதாக வழக்கறிஞர் ராமசாமியை டெல்லியில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்