கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையிலும் மாவட்ட அளவிலான சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. குளித்தலை ஆண்டார் பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளையும் உடனடியாக அகற்றுவது குறித்தும், கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் அவசர ஊர்திகளை (ஆம்புலன்ஸ்) அரசு விதிகளின்படி உள்ளனவா மற்றும் செயல்படுகிறனவா என்பதனை ஆய்வு செய்வது குறித்தும், ஆட்டோக்களிலிருந்து அதிகயளவு கரும்புகையானது வெளிவருகிறது.
ஆகையால் அவ்வாகனங்களை ஆய்வு செய்தல் குறித்தும், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிப்பது தொடர்பாக, அனைத்து தனியார் அவசர ஊர்திகளின் (ஆம்புலன்ஸ்) வாகன ஓட்டிகளுடன், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை இணைத்து ஆலோசணை கூட்டம் நடத்துவது குறித்தும், 27.07.2022 அன்று நடைபெற்ற சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. கரூர் மாவட்டம், கரூர் ஊரக உட்கோட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் ஆம்புலன்ஸ்கள் 10க்கும் மேற்பட்டவை இயங்கிவருவதாகவும் மேற்படி ஆம்புலன்ஸ் வாகனங்கள் பெரும்பாலானவை முறையான அனுமதி பெறாமலும், வாகன பதிவு சான்றுகள் இல்லாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், இயங்கி வருவதாக தெரியவருகிறது. மேலும், தொழில் போட்டி காரணமாக விபத்து நடக்கும் இடத்திற்கு தகவல் தெரிந்தவுடன் ஒரே நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவது குறித்தும்.
குளித்தலை பஸ் நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு வழிகாட்டும் பலகை இல்லாமல் இருப்பதால் தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்தும், தோகைமலை வழியாக குளித்தலை-மணப்பாறை பிரதான சாலையில் தேசியமங்கலம் முதல் கழுகூர் வரை ஆங்காக்கே சாலை குண்டும், குழியுமாக சாலைகளை சீரமைத்தல் குறித்தும், குளித்தலை நகராட்சி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், காந்தி சிலை, காவல் நிலையம், குளித்தலை சுங்ககேட் ரவுண்டானா, பெரிய பாலம் போன்ற இடங்களில் சில தனியார் நிறுவனத்தினர் விளம்பர தட்டிகளை அகற்றுவது குறித்தும், குளித்தலை அடுத்த மருதூர் பேரூராட்சி விஸ்வநாதபுரத்தில் உரிய சாலை வசதிகள் குறித்தும், லாலாபேட்டை தொடங்கி பிள்ளப்பாளையம், வல்லம், பாலப்பட்டி வரும் செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக சாலைகளை சீரமைப்பது குறித்தும், கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாயனூர் தண்ணீர்பாலம், கிருஷ்ணராயபுரம் கல்லுக்கடை, கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சாலை மேடு பள்ளமாக பல மாதங்களாக கிடக்கிறது.
ஆனால் இதனை சரிசெய்யாமல் சாலையின் இருபுறமும் தடுப்பு தூண் நடும் பணி நடந்து வருவது குறித்தும், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் ராஜேந்திர ஊராட்சியில் தண்ணீர்பள்ளியில் இருந்து கருங்கலப்பள்ளி உள்ள சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக சாலைகளை சீரமைப்பது குறித்தும், கரூர் to ஈரோடு KVB தலைமை அலுவலகம் சாலையில் அதிகப்படியான தடுப்பான் உள்ளது. அதை அகற்றப்பட வேண்டும். அந்த இடத்தில் வேகத்தடை உள்ளதால் பாதுகாப்புதான் கோவை சாலையில் தடுப்பான் அவசியம் தேவை குறித்தும், ராம் நகர் சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட VUP -க்கு பிறகு NH 7 –ஐ நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாகவும், இந்த VUP–யின் இருபுறமும் இரண்டு கி.மீ இந்த மாவட்டத்தில் சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்டில் இருந்து வரும் டிரக்குகள் உட்பட சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திடீரென அதிகரித்து நெரிசல் மற்றும் கனரக லாரிகள் அடுத்த ரயில்வே பாலத்தில் உடனடியாக முடுக்கம் சரிவுடன் ஏறுவது கடினம் என்றும், முன்பு இச்சாலை செயல்பட்டு கொண்டிருந்ததை தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளதை வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கும், வாகனங்களுக்கும் இடையூறாக இருப்பதால் வேகத்தடை தாண்டிய உடன் தேசிய நெடுஞ்சாலை இணைக்கப்பட்டுள்ள நிலைபாட்டிலேயே செயல்பட வேண்டுவது குறித்தும் கிருஷ்ணராயபுரம் வட்டம், மணவாசி முடக்கு சாலையில் உள்ள எழுதியாம்பட்டி நான்கு ரோடு குண்டும், குழியுமாக உள்ளது, மற்றும் RS சேம்பர் எதிரே குடிநீருக்காக ரோடு பறித்தது இன்னும் சரி செய்யாமல் குழியாக உள்ளது.
இதனை சரிசெய்வது குறித்தும், எழுதியாம்பட்டி ஆரம்பபள்ளி அருகே வேகத்தடை அமைப்பது குறித்தும், எழுதியாம்பட்டி செக்கனம் செல்லும் சாலை 4-ரோட்டிலிருந்து கோவக்குளம் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் சாலைகளை சீரமைப்பது குறித்தும், காந்திகிராமம், திருச்சி ரோடு EB காலனி பிரிவு இடத்தில் இருக்ககூடிய கரூர் பிரியாணி சென்டர் (FAST FOOD ) கடைகள் 5 அடி ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றுவது குறித்தும் கரூர் மாவட்டத்தில் இந்திய மோட்டார் வாகனச் சட்டத்திற்கு புறம்பாக வாகனத்தின் பதிவெண் பலகையில் அரசியல்வாதிகளின் புகைபடத்தை அச்சிட்டும், சட்ட விரோதமாக வாகனங்களை இயக்கியோர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டயுதாபாணி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) சந்திரசேகர், சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்கம், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.