பிஎச்.டி. மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரபல ஆய்விதழ்களில் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறையை ரத்து செய்ய யுஜிசி முடிவு செய்துள்ளது. 75% பிஎச்.டி. மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிஎச்.டி. படிக்கும் மாணவர்கள், முன்னணி ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வு கட்டுரைகளைப் பிரசுரிக்க வேண்டும் என்பது தற்போதைய யுஜிசி விதிமுறையாகும். ஆனால் நடைமுறையில், தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான ஆய்விதழ்களில் 75 விழுக்காடு ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதில்லை. இதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ள யுஜிசி, பிரபல ஆய்விதழ்களில் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறையை ரத்து செய்ய உள்ளது.