L.Murugan: ”சேரி என்பது அனைத்து மக்களும் இருக்கிற பகுதி தான்" - குஷ்பூ பேச்சு குறித்து எல்.முருகன் பேச்சு!

பட்டியல் இன மக்கள் மட்டும் தான் சேரி பகுதியில் வசிப்பார்கள் என்பது கிடையாது என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

L.Murugan: பட்டியல் இன மக்கள் மட்டும் தான் சேரி பகுதியில் வசிப்பார்கள் என்பது கிடையாது என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

’சேரி’ சர்ச்சை:

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து அநாகரிகமான கருத்துகளை நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சூறாவளியை கிளப்பியது. இதற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர், தேசிய மகளிர் ஆணையம் என அனைவரும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு,  அதனை த்ரிஷாவும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.

முன்னதாக, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர் ஆணைய தலைவரும், நடிகையுமான குஷ்பு  தெரிவித்திருந்தார். த்ரிஷாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வந்த குஷ்பு அதற்காகப் பயன்படுத்திய 'சேரி மொழி' என்ற வார்த்தையால் கடும் விமர்சனத்துக்கு உள்ளார். 

மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்பு:

அதாவது, எக்ஸ் தளத்தில் குஷ்புவை சரமாரியாக ஒருவர்  கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதலளித்த குஷ்பு, "திமுகவினர் இப்படித்தான் மொழியை பயன்படுத்துகின்றனர். இதுதான் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் சேரி மொழியில் பேச முடியாது" என்று சொன்னதாக கூறப்படுகிறது.  சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பு அவமதித்து உள்ளார் என பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.  குஷ்புவின் இந்த பேச்சால் நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் குஷ்புவின் உருவ பொம்பையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த விஷயம் பூதாகரமாக மாறிய நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, "சேரி என்பதை நான் வேறு அர்த்தத்தில் கூறினேன். அதற்கு பிரஞ்சு மொழியில் அழகு என்று அர்த்தம். ஒரு பெண்ணை பார்த்து தகாத வார்த்தையை பேசுபவர்களை கேட்காமல் நான் ஒரு வார்த்தைய சொன்னதற்காக என்னை கேட்கிறார்கள்.  நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை.  சேரி என்று கூறியதற்கு நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். 

குஷ்பு குறித்து எல்.முருகன் சொன்னது என்ன? 

இந்நிலையில், இன்று மத்திய இணை அமை்சசர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "சேரி என்பது அனைத்து மக்களும் இருக்கிற பகுதி தான். பட்டியல் இன மக்கள் மட்டும் தான் சேரி பகுதியில் வசிப்பார்கள் என்பது கிடையாது. இதை ஒரு இவ்வளவு பெரிய விவதாமாக மாற்ற தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர், "உண்மையான சமூகநிதி இருந்தால் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.  கூட்டணியில் இருந்து கொண்டே தாங்கள் கைகாட்டுபவர்கள்தான் பிரதமர் என தன்னிச்சையாக கூறியுள்ளார்.  சென்னையில் பாஜகவினரை திமுகவினர் தாக்கியது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் எல்.முருகன்.


மேலும் படிக்க

இது தேவைதானா? வெளிநாட்டில் திருமணம் செய்யாதீங்க... பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ்

Continues below advertisement