இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிமுகவிலிருந்து விலகிய கோவை செல்வராஜ் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 


ஈபிஎஸ் – ஓபிஎஸ் என்ற சுயநலவாதிகளுடன் சேர்ந்து செயல்பட முடியாது என்று கூறி அதிமுகவில் இருந்து திடீரென விலகியிருக்கும் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்.


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிகள் இரண்டாக பிரிந்தபோது, கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து அவரது அணியில் தொடர்ந்தார். அப்போது அவருக்கு மாநில செய்தித் தொடர்பாளர் பதவி தரப்பட்டது. ஆனால், அவர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டும் அதனை எடப்பாடி பழனிசாமி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்தவர், ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்டு தனி அணியாக செயல்பட்ட நிலையில், அவருடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையான வார்த்தைகள் தாக்கி பேசி வந்தார். 


இந்நிலையில், திடீரென ஓபிஎஸ் மீதும் குற்றச்சாட்டுகளை கூறி அவர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளிப்படையாக பேட்டியோ அறிக்கையோ கொடுக்காமல், ஆடியோ ஒன்றை மட்டும் வெளியிட்டு விட்டு அதிமுகவை விட்டு விலகுவதாக அவர் அறிவித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.


கோவை செல்வராஜ் ஆடியோ வெளியிட்ட நாளில் இருந்தே அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மூலமாக இன்று திமுகவில் இணைந்தார்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


”14 வயதில் நான்  திமுகவிற்கு ஓட்டு கேட்டு இருக்கேன்  தற்போது திமுகவில் தாய் கழகத்திற்கு இணைந்து உள்ளேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார். அதிமுகவில் கடந்த 7 ஆண்டுகளாக பயணித்து வக்காலத்து வாங்கியதற்கு பொது மக்களிடையே மன்னிப்பு கேட்கிறேன்..


ஒரு பெரிய சுனாமியாக மக்களை ஏமாற்றிய நாட்டை ஏமாற்றிய தமிழகத்தை அழிவு பாதையைச் கொண்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி செயல்பாட்டு தமிழ்நாடு சீரழிந்து  இருந்ததை இன்று சீர்படுத்தி இந்த ஒன்றை ஆண்டு காலத்தில் எங்களுடைய மனநிலை புரிந்து ஏழை எளிய மக்களுக்காக மக்களாட்சி நடத்துகின்ற மக்களாட்சி தத்துவத்தை செயல்படுத்துகின்ற சமூகநீதி பாதுகாவலர் முதலமைச்சராக அவர்களை தலைமையில் இணைந்து இன்று நாங்கள் செயல்பட வந்திருக்கிறோம்.


 நாலரை ஆண்டு காலமாக அதிமுகவுக்கு வக்காலத்து  பேசியதற்கு நான் மக்களிடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்


தற்போது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது பொருளாதாரம் தொழில் வளர்ச்சி சிறப்பாகவும் சீரகவும் உள்ளது.. தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் பயணிப்பேன்.


முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி இருந்தபோது ஏழை எளிய  விவசாயிகளுக்கு பத்தாயிரம் பேருக்கு தான் இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒன்றரை லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டிக் காட்டினார்.


விரைவில் ஐந்தாயிரம் பேருடன் திமுகவை இணைந்து கோவையை திமுக கோட்டையாக மாற்றுவோம். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி தெளிவான முடிவெடுத்து திமுகவில் இணைந்துள்ளேன்” என கூறினார்.