வேறு பெண்களுடன் பேசிய கணவர்

Continues below advertisement

கோவை கணபதி சின்னசாமி நகர் மூன்றாவது வீதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து , பிளம்பராக பணியாற்றி வருபவர் அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைச் சேர்ந்த விதான் ஹசாரிகாி. இவரது மனைவி ஜிந்தி. அத்திப்பாளையம் பிரிவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் விதான் ஹசாரிகா பிளம்பர் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் , கோவையில் அதே பகுதியில் வசித்து வரும் வடமாநில பெண்களுடன் விதானுக்கு தொடர்பு ஏற்பட்டது மனைவி ஜிந்திக்கு தெரிய வந்துள்ளது. தொடர்பில் இருந்த பெண்களுடன் விதான் தொடர்ச்சியாக வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார். இது தொடர்பாக பலமுறை எச்சரித்தும் விதான் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவரும் சண்டையிட்டு வந்துள்ளனர்.

Continues below advertisement

நீ சொந்த ஊருக்கே போய் விடு

மனைவி ஜிந்தி வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டிற்கு இளம்பெண் ஒருவரை அழைத்து வந்த விதான் தனிமையில் இருந்துள்ளார். திடீரென வீட்டிற்கு வந்த ஜிந்தி இதனைப் பார்த்து ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். இதில் கணவன் மனைவிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. நீ சொந்த ஊருக்கே போய் விடு , சொந்த ஊரான அசாம் மாநிலத்திற்கு சென்று விடுமாறு விதான் ஜிந்தியை மிரட்டியதாகத் கூறப்படுகிறது.

மது போதையில் உறங்கிய கணவர்

சம்பவத் தன்று விதான் வேலை முடிந்து வீட்டிற்கு மது போதையில் வந்து தூங்கிக் கொண்டிருந்த போது கோபத்தில் இருந்த ஜிந்தி, விதானின் அந்தரங்க உறுப்பை அறுத்து வீசியதோடு அந்த அறையிலேயே வைத்து பூட்டி விட்டு தப்பிவிட்டார்.

விதானின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த அறையின் பூட்டை உடைத்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து விதான் சிகிச்சையில் உள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, கணவனின் அந்தரங்க உறுப்பை அறுத்த ஜிந்தியை கைது செய்துள்ளனர்.