கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்காக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை உயர்நீதி மனற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக ஜனவரி 30 மற்றும் 31ஆம் தேதிகளில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக சாட்சியங்களை பதிவு செய்ய எடப்பாடி பழனிசாமியை சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் விடுமுறை மற்றும் அதன் பின்னர் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடருக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவதை எதிர்த்து மேத்யூ சாம்வேல் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


கோடநாடு வழக்கில் தன்னையும் தொடர்புபடுத்தி பேசியதற்காக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த 2016ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அவர் பொதுச் செயலாளராக இருந்த அதிமுக மட்டும் இல்லாமல் அவருக்கு சொந்தமான சொத்தகளுக்கும் உரிமைகோறல் வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்தது. இதில் கூடுதல் வழக்காக இருப்பது, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்ததும் இங்கு நடந்த கொள்ளை முயற்சியின் போது காவலாளி உயிரிழந்ததுதான். இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் நீலகிரி மாவட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், மேற்கு மண்டல ஐ.ஜி தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வந்தனர். தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. கூடுதல் எஸ்பி தலைமையிலான கோவை சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இவ்வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட முக்கிய நபரான ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து உண்மையிலேயே விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா என்ற சந்தேகம் இப்போதுவரை பலருக்கும் உள்ளது. 


இறந்து போன கனகராஜின் கசோதரர் தன்பால் மற்றும் உறவினர்கள், சந்தேகத்திற்கு உரிய நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில்  ஏற்கனவே பலருக்கும் சம்மன் அனுபப்பட்டது குறிப்பிடத்தக்கது.