கொடைக்கானல் தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சில பேர், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைகளை ஆங்காங்கே போட்டு சென்று விடுகின்றனர். 


இதனால், அங்கு இருக்கும் பிளாஸ்டிக்கால் மண் வளம் பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும், அங்கு இருக்கும் வன விலங்குகளும் பிளாஸ்டிக் பைகளை சில நேரங்களில் உணவாக உட்கொள்வதால், உடல் நலமும் பாதிப்புக்குள்ளாகிறது.


சீல் வைக்க உத்தரவு:


இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொடைக்கானல் மலைப்பகுதிகளில், பிளாஸ்டிக் தடை செய்ய உத்தரவிட்ட பிறகும், பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வழிகளிலும் சோதனை சாவடி அமைத்து, சோதனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.