கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் ஓசூர் கெலவரப்பள்ளி அணை,   கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணைகளில் நீர் நிரம்புகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அருகில் ஒரு சிறிய அணைகட்டு  கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ளப்பெருக்கு ஏற்படும். இந்நிலையில் தற்போது தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு  கொள்ளளவு : 44.28 அடி,  நீர் இரும்பு 41.56 அடி,  அணைக்கு வினாடிக்கு 786 கன அடி தண்ணீர் தொடர்ந்து வந்து  கொண்டுள்ளது.



மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 908 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் இருந்து கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி தண்ணீர் முழுவதும் கலங்கிய நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக  இரண்டாவது நாளாக கால்வாய் மற்றும் ஆற்றில் அதிக அளவில் நுரை வெளியேறி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், சுற்றுவட்டார பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் மற்றும் ரசாயன பொருட்களின் கழிவுநீர் அதிக அளவில்  கலந்து வருவதால் கெலவரப்பள்ளி அணையில் துர்நாற்றம் வீசி வருவதாகவும். இதனால் விவசாயம் செய்யும் நாங்கள்  பயிர்களுக்கும் மற்றும் இந்த நீரை குடிக்கும் கால்நடைகளுக்கும் ஏதேனும் விபரீதம் நடந்து விடுமோ என்கின்ற அச்சத்தில் உள்ளனர் என்றும்.



தொடர்ந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் மாசடையும் அபாயம் உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பதால் இந்த தண்ணீரானது திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கடலூர் போன்ற 5 மாவட்டங்களின் வழியாக தெண்பண்னை ஆறு செல்கிறது. இந்த தண்ணீரானது திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் பகுதியில் தெண்பெண்னை ஆற்றில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து தண்ணீர் சேமிக்கப்பட்டு குடிநீருக்கு திருவண்ணாமலை நகராட்சியிலும், தண்டராம்பட்டு, தாணிப்பாடி, விழுப்புரம் மாவட்டத்திலும் தண்ணீர் மக்கள் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். இதனால் தற்போது ரசாயனம் கலந்தவாறு வெளியேரும் தண்ணீரை இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ் நாடு  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


’உரம்’ கொடுக்காத மத்திய அரசு..தவிக்கும் விவசாயிகள்!Farmers Demand | Fertilizer Shortage | Thiruvarur