‘இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் என்ன நடக்கும் என்று பாருங்கள்’ - ஆர்.எஸ். பாரதி சூசக பேச்சு

உதயநிதி அமைச்சராக வேண்டும் திமுக மூத்த நிர்வாகிகள் தான் முதல்வர் இடத்தில் வலியுறுத்தினோம் - வாரிசு அரசியல் பற்றி அதிமுக பேசக்கூடாது - பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு.

Continues below advertisement

உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று திமுக மூத்த நிர்வாகிகள் தான் முதல்வர் இடத்தில் வலியுறுத்தினோம் என்றும், வாரிசு அரசியல் பற்றி அதிமுக பேசக்கூடாது எனவும் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

Continues below advertisement


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


அப்போது உரையாற்றிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கலைஞர் கருணாநிதியுடன் இணைந்து பேராசிரியர் அன்பழகன் கட்சியை ஒழுங்காக வழி நடத்தியதால்தான் திமுக என்ற கட்சி இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று திமுகவின் மூத்த நிர்வாகிகள்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம். வாரிசு அரசியல் என்று திமுகவை சொல்கிறார்கள், அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லையா? எம்.ஜி.ஆர்-க்கு பிறகு ஜானகி அம்மையார் முதல்வராக பதவி ஏற்றார். ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யாகவில்லையா? வாரிசு அரசியல் பற்றி அதிமுக பேசக்கூடாது. திமுகவில் யார் அமைச்சராக வேண்டும் என்று எங்களைப் போன்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் தான் முடிவு செய்கிறோம். அதைப்பற்றி நீங்கள் பேசத் தேவையில்லை.


அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் பேச்சுக்கு கூடிய கூட்டத்தைப் போன்று உதயநிதிக்கும் கூட்டம் கூடுகிறது. இன்னும் ஆறு மாதத்தில் தமிழகத்தில் என்ன நடக்கும் என்று பாருங்கள் என சூசகமாக ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola