மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டியது மாயனூரில் 84 மி.மீ.,
கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக மாயனூரில் 84 மி. மீ., மழை பதிவானது. மேற்கு திசைகாற்றின், வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் தொடங்கிய மழை நீடித்தது. மழையளவு விவரம் (மி. மீ.,) கரூர், 1.8, குளித்தலை, 25, தோகமலை, 8.4, கிருஷ்ணராயபுரம், 81, மாயனூர், 84, பஞ்சம்பட்டி, 43.4, கடவூர் ,10,பாலவிடுதி, 34.2, மயிலம்பட்டி, 30 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக, 26.48மி.மீ.,மழைபதிவானது.
மாயனூர் கதவணை
கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 9,404 கனஅடி தண்ணீர் வந்தது. நிலவரப்படி வினாடிக்கு 9,635 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரி யாற்றில், 9,015 பதினைந்து கனஅடி தண்ணீரும், தென்கரை வாய்க்காலில் 200 கன அடி தண்ணீரும் கீழ்கட்டளை வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும், கிருஷ்ணராயபுரம் கிளை வாய்க்காலில், 20 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நிலவரப்படி வினாடிக்கு, 33 கன அடியாக தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 56.01 அடியாக இருந்தது. அமராவதி ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.