கரூரில் மே 1 விடுமுறை தினத்தில் பார் ஒன்றில் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்றது. மது பிரியர்கள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.




மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மதுபான பார்களில் கள்ளச் சந்தையில் மதுபான விற்பனை ஜருராக நடைபெற்றது. 




குறிப்பாக கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மண்டி கடை வணிக வளாகத்திற்கு எதிரே அமைந்துள்ள அரசு மதுபான கடை அருகில் அமைந்துள்ள பார் ஒன்றில் வெளிப்படையாக பிரிட்ஜில் வைக்கப்பட்ட பீர் பாட்டில்களும், மதுபானங்களும் மது பிரியர்களுக்கு சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் விற்கப்பட்டு வருகிறது. 




மே தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு விதித்துள்ள உத்தரவை மீறி, மதுபானம் விற்பனை செய்யப்பட்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


அரசு உத்தரவை மீறி சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண