கரூரில் உழவர் சந்தை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட நிலையில் மாற்று இடத்திற்கு செல்லாமல் சாலையோரத்தில் விற்பனை செய்த வியாபாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


 




கரூர் மாநகர் பகுதி திருச்சி செல்லும் சாலையில் உள்ள உழவர் சந்தை தற்போது பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. இங்கு விற்பனைக்கு வரும் வியாபாரிகள் 20 ஆம் தேதி வரை செயல்படாது என அறிவிப்பு வைக்கப்பட்டு உள்ளது. அதற்கு மாறாக உழவர் சந்தை நிர்வாகம் வெங்கமேடு பகுதியில் உள்ள குளத்துப்பாளையம் உழவர் சந்தையில் வியாபாரிகள் விற்பனை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உழவர் சந்தை நிர்வாகம் ஒரு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டது. வியாபாரிகள் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்து கரூர்- திருச்சி சாலை ஓரங்களில் கடைகள் அமைத்து விற்பனையை செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலாக விற்பனை செய்யும் வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் சிறு கடை வியாபாரிகள் என பலரும் வந்து காய் உள்ளிட்ட கீரை வகைகள் வாங்கி செல்கின்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சாலையில் செல்லும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. போக்குவரத்து ஊர்ந்து செல்லும் வகையில் உள்ளது.


 




 


கரூர் வெங்கமேடு உழவர் சந்தை வளாகத்தில் விரிவான ஏற்பாடு


கரூர் உழவர் சந்தை ஐந்து நாட்களுக்கு பராமரிப்பு பணி நடைபெறுவதால் இந்த சந்தை வெங்கமேடு உழவர் சந்தை வளாகத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த 2000 ஆண்டு முதல் உழவர் சந்தை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த சந்தையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து தங்களது தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்று வருகின்றனர். உழவர் சந்தை வளாகத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தினமும் 10 டன் அளவில் காய்கறிகள் இந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழவர் சந்தை வளாகத்தை புதுப்பிக்கும் வகையில் கடந்த மூன்று மாதங்களாக சந்தை உட்புறம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருபுறம் மட்டுமே கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போதைய நிலையில், கடைகள் அனைத்தும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளதால், உழவர் சந்தை வளாகம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெங்கமேடு உழவர் சந்தை வளாகத்தில் செயல்படும் எனவும் உழவர் சந்தை முன்பு அறிவிக்கப்பட்டது. உழவர் சந்தை இடமாற்றம் குறித்து சந்தை நிர்வாகி தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களாக சந்தை வளாகத்தை சுற்றிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.