Karur: தலைக்கவசம் உயிர்க்கவசம்; கரூரில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் பேரணி

லைட்ஹவுஸ் கார்னரில் துவங்கி பழைய பை - பாஸ் சாலை, பேருந்து நிலையம், மேற்கு பிரதட்சணம் சாலை, வடக்கு பிரதட்சணம் சாலை, ஆசாத் சாலை வழியாக சென்று  கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்புறம் முடிவடைந்தது.

Continues below advertisement

கரூரில் இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் தலைகவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Continues below advertisement

 

 


 

கரூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகன பழுதுபார்ப்போர் அனைத்து கிளை சங்கங்கள் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் தொடங்கிய இப்பேரணியை கரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இப்பேரணியில் இரு சக்கர பழுது நீக்குவோர் 50க்கும் மேற்பட்டோர் தலைகவசம் அணிந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தலைகவசம் மணிதனின் உயிர் கவசம் என்று எடுத்துரைக்கும் வகையில், இருசக்கர வாகன ஒட்டிகள் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்கின்ற வகையில்  விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். 

இப்பேரணியானது லைட்ஹவுஸ் கார்னரில் துவங்கி பழைய பை - பாஸ் சாலை, பேருந்து நிலையம், மேற்கு பிரதட்சணம் சாலை, வடக்கு பிரதட்சணம் சாலை, ஆசாத் சாலை வழியாக சென்று  கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்புறம் முடிவடைந்தது.

நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 115,  139 மற்றும் 152 ஐ உடனடியாக ரத்து செய்து வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி சென்று தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. 

 

 

 


ஜூலை 2 எழுச்சி நாள் கருத்தரங்கம்- அரைகூவலின் படி நடைபெற்ற இந்த பேரணியானது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. பேரணியில், முன்னாள் மாநிலத்துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

 

 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றிட வேண்டும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்புவிப்பை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்,  நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 115,  139 மற்றும் 152 ஐ உடனடியாக ரத்து செய்து தர வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

 

Continues below advertisement