கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாளியாம்பட்டி கிராமத்தில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்தும் "பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு" என்ற (பள்ளி செல்லா குழந்தைகள் திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர்களுக்காக) விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் கரூர் மாவட்டத்தில் கொரோனா காலங்களில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் கணக்கெடுப்பின் போது 3000 பெண் குழந்தைகள் இடைநிற்றல் ஆகியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோகைமலை ஊராட்சி, வாளியாம்பட்டி கிராமத்திலுள்ள 32 பெண் குழந்தைகள் இடைநிற்றல் ஆகியிருப்பது மிகவும் வருத்தத்திறகுரிய நிகழ்வாகும். அவர்களை பள்ளிக்கு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகள் மூலம் அவர்களின் தேவைகளை வீடு வீடாக சென்று அவர்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆகையால் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து உயர் கல்வியை ஊக்குவித்தும், குழந்தை திருமணத்தை தடுத்தும் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்கவேண்டும்.




மேலும், குழந்தைகளிடையே நான்கு கோரிக்கை வைத்தார்கள். அதில் முதலாவது கோரிக்கையாக பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை சேர்வதற்கு முன்வர வேண்டும். குறிப்பாக 11ம், 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கோரிக்கை மதிய உணவு மற்றும் அங்கன்வாடியில் வழங்கப்படும் சத்துணவுகளை உட்கொள்வதற்கு முன்வர வேண்டும். ஏனென்றால் ஊட்டச்சத்து அதிகம் உள்ள சத்தான உணவுகளை சத்துணவு மையங்களில் வழங்கப்படுகின்றது. ஆகையால் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வதற்கு முன் வர வேண்டும். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர்  காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். மூன்றாவது கோரிக்கையாக பெண்கள் உயர்கல்வி படிப்பை முடித்த பின்பு தான் திருமணம் செய்து கொள்வதற்கு வழி வகுக்க வேண்டும். நான்காவது கோரிக்கையாக பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பு சூழலை ஏற்படுத்தும் பெண்கள் சிறப்பு ஓய்வறை அமைத்து தரப்படும். அந்த ஓய்வறையில் சுடு தண்ணீர் வசதி, கழிப்பறை, குளியலறை வசதி. புத்தகங்கள், சாதனை பெண்களின் புகைப்படங்கள் வைக்கப்படும். மேலும் வரும் திங்கட்கிழமை (01.08.2022) அன்று பேருந்துகள் துவக்கப்பட்டு அனைத்து குழந்தைகளுடன் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு" பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வாருங்கள், பள்ளிக்கு போகலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் தெரிவித்தார்.




பள்ளியளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி செல்லா குழந்தைகள், குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்களை தடுத்தல் போன்றவை குறித்த கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னனு வீடியோ வாகனம் மூலம் விழிப்புணர்வு தொடர்பான குறும்படங்கள் திரையிடப்பட்டன.




இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குநர் மந்திராச்சலம்(ஊரக வளர்ச்சி முகமை), ஓய்வு பெற்ற நீதியரசர் தங்கராஜ், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, முதன்மை கல்வி அலுவலர் கீதா, சமூகநலத்துறை அலுவலர் நாகலட்சுமி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு குணசீலி, மந்தா நாய்க்கர்கள் சின்னசாமி, கோபாநாய்க்கர், ஊராட்சி மன்ற தலைவர் பொண்ணம்மாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண