குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்  லதா (அதிமுக) வின்  செயல்பாடுகள் நிர்வாகத்தில் சரியான முறையில் இல்லை என்றும்,  இவரது கணவர் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதாக கூறி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருதல் குறித்து குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவியிடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் உட்பட 11 திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை மனு அளித்தனர். 


 


 




கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர்(அதிமுக), ஒன்றிய குழு துணை தலைவர் மற்றும் 13 ஒன்றிய கவுன்சிலர்களுடன் 15 பேர் உள்ளனர். இதில் 10 பேர் திமுகவை சேர்ந்தவர் ஒன்றிய கவுன்சிலர்கள், 1 திமுகவைச் சேர்ந்த ஒன்றிய குழு துணை தலைவர், 1 அதிமுக ஒன்றிய குழு தலைவர்,  2  அதிமுக கவுன்சிலர்கள், 1  பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலர்  உள்ள நிலையில் இன்று ஒன்றிய குழு துணை தலைவர் மற்றும் 10 திமுக ஒன்றிய கவுன்சிலர்கள்  தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லதா (அதிமுக) மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருதல் குறித்து குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவியிடம்  கோரிக்கை மனு அளித்தனர்.


 




 


மனுவில், ஒன்றிய குழு தலைவர் லதாவின் செயல்பாடுகள் நிர்வாகத்தில் சரியான முறையில் இல்லை,  இவரது கணவரான ரங்கசாமி அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு தனக்குச் சொந்தமான காவிரி ஏஜென்சிஸ் பெட்ரோல் பங்கில் அரசுக்கு சொந்தமான வாகனத்திற்கு தனது பங்கில் எரிபொருளை நிரப்புவதில் முறைகேடுகள் நடைபெறுகிறது மற்றும் மாமன்ற கூட்டத்தில் பொது நிதி செலவு கணக்கில் முறைகேடு  நடைபெறுகிறது,  அதைக் கேட்ட ஒன்றிய குழு உறுப்பினர்களையும்  மற்றும் அரசு அதிகாரிகளையும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அடியாட்களை வைத்து மிரட்டி ஒன்றிய குழு கூட்டம் நடத்துகிறார் என்றும் ஒப்பந்த பணிகளில் தலையிட்டு பணி முடிக்கும் முன்பே பில் எழுதி தர வேண்டும் என்று அதிகாரிகளை வற்புறுத்துகின்றார்,  அடுத்தவர்களின் பெயரில் ஒப்பந்த பணிகளை எடுத்துக்கொண்டு பணிகளை சரிவர செய்யாமலும் பில் எழுதி பணம் எடுத்து வருகிறார், ஒன்றிய குழு தலைவர் லதா பயன்படுத்தும் அரசு வாகனத்தை தனது வாகனமாக சொந்த வேலைகளுக்கு ரங்கசாமி அமர்ந்து கொண்டு செல்கிறார்,  என்றும் ஒன்றிய குழு தலைவரின் சகோதரர், தந்தை மற்றும் உறவினர்கள் நிர்வாகத்தில் தலையீடு செய்வதாகவும்.


 


 


 




பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தொடர்ந்து, இதே நிலை நீடித்தால் பெண்களுக்கு உள்ளாட்சியில் வழங்கப்பட்ட உரிமை கணவர் தானே கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி ஒன்றிய குழு தலைவர் லதா மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தமிழ்நாடு அரசு ஊராட்சிகளின் சட்டப்பிரிவு 212 இன் படி ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர்.