டி. செல்லாண்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 1000 கிலோ காய்கறிகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டி. செல்லாண்டிபாளையம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 1000 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பகவதி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.




இந்த சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பகவதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற காய்கறி அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக பகவதி அம்மனுக்கு கேரட், பீட்ரூட், உருளை, பச்சை மிளகாய்,வாழைக்காய், நெல்லிக்காய், வெண்டைக்காய், செவ்வாழை, மாங்காய், தக்காளி, சாத்துக்குடி, மாதுளை, எலுமிச்சை, அண்ணாச்சி, தர்பூசணி, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு அதைத்தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் பகவதி அம்மனுக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. டி.செல்லாண்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற காய்கறி அலங்கார நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.




 


கரூர் அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவைய பிரதான ரங்கநாதர் சுவாமி உற்சவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



அதை தொடர்ந்து அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமிக்கு பட்டாடை உடுத்தி, ஆபரணங்கள் மற்றும் வண்ண மாலைகள் அணிவித்தனர். அதைத்தொடர்ந்து ஆலயத்தின் பட்டாச்சாரியார் அவைய பிரதான ரெங்கநாத ஸ்வாமிக்கு துளசியால் நாமாவளிகள் கூறினார். பின்னர் மேல தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அவைய பிரதான ரெங்கநாத ஸ்வாமி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா காட்சி அளித்தார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.